பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 315. பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே எனக் கருதி பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா உன் சேவடி கூடும் வண்ணம் தோள் நோக்கம் 1 பூத்து ஆரும்-பூத்து நிறைந்த முகக்குறும்-மொள்ளும். பேய்த்தேர் என்பது கானல்நீர் ஆகும். பல சமயங்களில் இப் பேய்த்தேர், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலர்கள் நிறைந்த ஒரு குளத்தின் காட்சியைக்கூடத் தரும். அப்படிப்பட்ட பேய்த் தேரிடம் சென்று தண்ணிர் முகக்க வேண்டும் என்று நினைப்பது அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து என்னை நீக்கினாய், தில்லைக் கூத்தனே! உன் திருவடியை வந்து அடைய வேண்டுமென்று தோள் நோக்கம் ஆடுவோமாக! பேய்த்தேரைப் பார்ப்பவர்கள் அதனை உண்மையென்றே நம்புகின்றனர். பேய்த்தேர் பற்றி அறிந்திருந்தாலும்கூட அதைப் பார்க்கும்பொழுது, இது மெய்யானது என்ற எண்ணம் பலருடைய மனத்தில் தோன்றும். தண்ணிர் இருப்பதாக நினைந்து மிக நீண்டது.ாரம் சென்ற பின்னரே உண்மையில் அது தண்ணிர் இல்லை என்பது தெரியவருகிறது. இல்லை என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, இவ்வளவு முயற்சியும் öfᎢᎧa தாமதமும் ஏற்படுகின்றன. இவ்வழகிய உவமையை அடிகளார் கூற ஒரு காரணம் உண்டு. பொறி, புல இன்பங்களில் ஈடுபடுபவர்கள் அது நிலையில்லாதது, பொய்யானது, மன நிறைவை அளிக்காதது என்பதை அறிந்துகொள்வதற்கு நீண்ட காலமாகிறது. அந்த நிலைக்குப் பின்னர் மனத் தெளிவு ஏற்பட்டும்கூடக் காலமும், வயதும், ஆகிவிட்ட காரணத்தால் புதிய வழியில் செல்லும் வாய்ப்போ, துணிவோ ஏற்படுவதில்லை.