பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தோணோக்கம் 173 கானல்நீர்பற்றிப் படித்தும், கேட்டும், அறிந்தும் இருந்தால்கூட அதனைக் காண்கின்ற ஒருவருடைய அறிவை மயக்கித் தன்பால் இழுக்கின்றது கானல்நீர். அதேபோல, பொறி புலன் இன்பங்கள் நிலையில்லாதவை, பொய்யானவை என்று எவ்வளவு அறிந்திருந்தாலும் அதனை விட்டு மீள்வது இயலாத காரியம். இறைவன் திருவருள் ஒருவருக்கு இருந்தாலொழிய இந்த மாயையிலிருந்து நீங்குமாறு இல்லை. அமைச்சர் வாழ்க்கை, அதற்கேற்ற சுகபோகங்கள் என்பவற்றில் மூழ்கி யிருந்த அடிகளாரைத் தில்லைக்கூத்தன் குருநாதர் வடிவில் வந்து ஒரே விநாடியில் திசை திருப்பியதைத்தான் பேதைகுணம் ஆகாமே தீர்த்தாய்’ என்று பாடுகிறார். 'அம்பலக்கூத்தா! உன் சேவடி கூடும் வண்ணம்’ என்று இறைவனை எதிரே நிறுத்தி அவனோடு நேரிடையாக உரையாடுவதைப்போல் அமைந்திருத்தலின் இதை முன்னிலைப் பராவல் என்றனர். 316. என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டு கொண்டான் கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம் பரவி துன்று ஆர் குழலினிர் தோள் நோக்கம் ஆடாமோ 2 துன்றார் குழலினிர்-நெருங்கி அமைந்த கூந்தலை உடையவர்களே. கன்றால் விளவெறிந்தான்-கண்ணன். குன்றாத சீர்-என்றும் குறையாத புகழ். விளையாட்டில் தலைமை ஏற்பவள், தன் தோழியரைப் பார்த்து இப்படிப்பட்ட பெருமை யுடைய பெருமான் புகழ்பாடி, தோணோக்கம் ஆடுவோ, மாக என்று அமைந்திருத்தலின், சென்ற பாட்டைப் போல் அல்லாது இந்தப் பாடல் படர்க்கைப் பராவலாக அமைந்துள்ளது. -