பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தோழி! பிறப்பு இறப்புச் சுழற்சியில் சிக்கிக்கொண்ட நாம் அந்தச் சுழலிலேயே மாறி மாறிப் பிறந்து, இறந்து சுழன்றுகொண்டே இருப்போம். அதிலிருந்து நம்மைக் காத்த ஆண்டவன் யார் தெரியுமா? கன்றால் விளவெறிந்த கண்ணனும், நான்முகனும் அடிமுடி தேடிச் சென்று காண முடியாமல் திரும்பிவிடுமாறு ஓங்கிய, தில்லைக் கூத்தனேயாம். அவனுடைய புகழைப் பாடித் தோனோக்கம் ஆடுவோமாக!' இப்பெருமக்கள் தம் அருட்பாடல்களில் பயன்படுத் தும் சில சொற்கள் மிக்க கவனத்துடன் பொருள் செய்ய வேண்டியவை ஆகும். இப்பாடலில் வரும் குணம் பரவி என்ற தொடர், நாம் அறிந்த பொருளைத் தருவதன்று. குணம் குறி கடந்திருப்பதே இறை இலக்கணம்; ஆதலின் 'குணம் பரவி என்றால், அஃது எவ்வாறு பொருந்தும்? இவ்விடத்தில் அதனைப் புகழ் அல்லது கருணை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். 317. பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க \, செருப்பு உற்ற சீர் அடி வாய்க் கலசம் ஊன் அமுதம் விருப்பு உற்று வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து o 钵 +. i. 缺 அங்கு அருள் பெற்று நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ 3 பொருள்-சிவபூசைக்குரிய சாதனங்கள். செருப்பு-கண்ணப்பரின் காற்செருப்பு. வாய்க்கலசம்-அவருடைய திருவாயாகிய கலசம். வேடனார்-கண்ணப்பர். இப்பாடலில் திண்ணனாருடைய வழிபாட்டு முறையையும் அதனை ஏற்றுக்கொண்டு உளம் குளிர்ந்த இறைவன் தமக்கு வலப்பக்கமாக இருக்கச் செய்ததையும் விரிவாகப் பாடுகிறார் அடிகளார்.