பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தோணோக்கம் 181 காரியத்தையும் திருத்தி அமைத்தல், தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் முயற்சி ஆகும். இத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே விடையைக் காண முடிவு செய்த இறைவன், அடிகளார் போன்ற அருளாளர்களைப் பிடித்து, முதலில் அவர்கள் சித்தத்தைச் சிவமாக்கிவிட்டான். அந்த ஒரு காரியத்தால் என்ன விளைந்தது தெரியுமா? அதுவரை அவர்களுக்கிருந்த பசுகரணங்கள் அனைத்தும் ஒரே விநாடியில் பதிகரணங்க ளாக மாறிவிட்டன. தம்பால் உள்ள கரணங்கள் அனைத் தையும் பதிகரணங்களாக மாற்றிக்கொண்டவர்கள் எதைச் செய்தாலும் அது தவச் செயல் என்றே கருதப்படும். தந்தையின் காலை வெட்டிய சண்டேசர், யானையின் துதிக்கையை வெட்டிய எறிபத்தர் ஆகியோர் செய்த செயல்கள் தவச் செயல்களாகவே மாறிவிட்டன. 'சித்தம் சிவமாக்கி’ என்ற தொடரும் 'சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட (திருவாச650) என்ற தொடரும் எந்த அளவிற்கு இந்த நாட்டுச் சைவசித்தாந்தக் கொள்கையோடு பொருந்தும் என்பது தெரியவில்லை. 321. தீது இல்லை மாணி சிவ கருமம் சிதைத்தானை சாதியும் வேதியன் தாதைதனைத் தாள் இரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம் - 7 மாணி-பிரமசாளியாகிய விசாரசருமன். சிவகருமம்-சிவபூசை. சிதைத்தான்-கெடுத்தவனாகிய எச்சதத்தன். சேதிப்ப-வெட்ட சோறுசாரமான பகுதி. 'குற்றமற்றவனாகிய விசாரசருமன், சிவபூசைக்கு இடையூறு செய்த தன்னுடைய தந்தையின் கால்களை வெட்டிய பாதகச் செயலே சண்டீசப் பதத்தை அவர் பெறுமாறு செய்தது; அதனைப் பாடுவோமாக என்கிறார்.