பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 320. புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம் தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்கச் சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும் அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ 6 தட்டுளுப்புப்பட்டு-தடுமாற்றமடைந்து. சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்-தற்போதங்கெட்டுச் சிவபோதம் அடைந்த ஆன்மாக்கள் செய்த செயல்கள் எல்லாவற்றையும் தவமாக்கலின் இங்ங்ணம் கூறினார். ‘புத்த சமயம் முதலான குறைந்த அறிவினரால் செய்யப்பட்ட சில சமயங்களில் உள்ளவர்கள் அந்தந்தச் சமயங்களில் முன்னேறத் தொடங்கி, செல்லுமிடம் அறியாது நிலை தடுமாறி நின்றார்களாக, நாம், நம் அத்தன் கருணையைப் பாடுவோமாக என்றபடி புறச்சமயத்தார் தட்டுளுப்புப் பட்டு நிற்கையில் தம்முடைய தலைவன் என்ன செய்தான் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு, அதற்கு விடை கூறுகிறார் அடிகளார். சைவ சமயத்தினர் வழிபடும் இறைவனாகிய சிவபெருமான் ஒரு மாபெரும் காரியத்தைச் செய்தான். மனிதர்கள் அனைவருக்கும் பெருங்குறைபாடு ஒன்றுண்டு. அவர்கள் வாழ்க்கையில் கொள்ளும் குறிக்கோ ளும் நன்கு வெளிப்படுவதில்லை; அந்தக் குறிக்கோளை அடையச் செய்யும் முயற்சியும் நன்கு அமைவதில்லை. பல சமயங்களில் ஒன்றைச் செய்யவேண்டும் என்று நினைத்து, ஏதோ ஒன்றைச் செய்துவிடுகின்றார்கள். அது தவறு என்று புரிந்ததும், "ஓ! இதை நானா செய்தேன்' என்று வருந்துகிறார்கள். எனவே, அவர்கள் குறிக்கோளுக்கும் செயலுக்கும் பெரு வேற்றுமை நிலைபெற்றுவிடுகிறது. என்ன செய்தும், மனிதர்களிடம் தவிர்க்க முடியாத இந்தக் குறைபாடு ஒன்று உண்டு. சித்தத்தைத் தன் போக்கில் விட்டுவிட்டு, அது செய்யும் ஒவ்வொரு