பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தோணோக்கம் 179 என்கிறார் அடிகளார். இது அவன் திருவுரு, இவன் அவன்' (திருவாச 374) என்று நான் சொல்லும் சொற்பாலது ஆயினான்’ என்பதையே அடிகளார். இங்கன் சொற்பாலது ஆயினான்' என்று பாடுகிறார். 319. நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து - நின்றான் உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே பல ஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ 5 புலனாய் மைந்தன்-அறிவு உடையவனாகிய இயமானன் அல்லது ஆன்மா. திசையத்து-நேர்த்திசையும் கோணற்றிசையுமாகிய எட்டோடு மண்ணும் விண்ணுமாகிய இரண்டும் கூட்டத் திசை பத்து. இந்தப் பாடலின் முதலிரண்டு அடிகளை மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது அட்டமூர்த்தமாக உள்ளான் என்று பொருள் செய்ய இடம் தந்துவிடும். அனைத்தும் இறை வடிவம் என்று சொல்கின்ற முறையில் அட்ட மூர்த்தங்களிலும் அவன் உள்ளான் என்று சொல் வதைத்தான் அடிகளார் ஏற்றுக்கொள்கிறாரே தவிர, அட்ட மூர்த்தங்கள் அவனே என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நுண்ணிய வேறுபாட்டைத் தெரிவிக்கவே ‘புணர்ந்து நின்றான்' என்கிறார். புணர்தல் என்றாலே இரண்டு பொருட்கள் நிற்றல் வேண்டும். அவனே அட்ட மூர்த்தமாக உள்ளான் என்று பொருள் கூறிவிட்டால் புணர்ந்து என்ற சொல் பொருளின்றி வற்றும். எனவே, அட்ட மூர்த்தம் என்று கூறப்படும் எட்டுப் பொருள்களிலும் அவன் புணர்ந்து நிற்பதோடு ஏழுலகம், பத்துத் திசை ஆகிய அனைத்திலுமே கலந்துநிற்கின்றான் என்ற கருத்தை இங்கே பேசுகிறார்.