பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 11 199, அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி, மற்று இந்திரனோடு அமரர் நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் செறிவு உடை மும் மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம் பொன் கோயில் பாடி முறுவல் செவ்வாயினிர் முக்கண் அப்பற்கு ஆடப் பொற்கண்ணம் இடித்தும் நாமே 5 நம்மில் பின்புல்லது-நமக்குப் பின்னாலல்லது. பொதுவாக மக்களினும் தேவர்கள் உயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை நிலவிவருகிறது. பருவுடம்பின்றிச் சூக்கும உடல் பெற்றிருக்கின்ற ஒரு வேறுபாடுதவிர வேறு எவ்வகையிலும் தேவர்கள் அடியவரிலும் மேம்பட்டவர்கள் அல்லர். மேவன செய்து ஒழுகும் தேவர்கள் (குறள்: 1073) அடியவரைவிட மேம்பட்டவர்கள் அல்லர் என்பது உறுதி, எனினும், தாம் தேவர்கள் என்ற தருக்கால் இறைவனுக்கு அறுகுப்புல் கொண்டு நெய் பூச முற்படுகின்றார். ஆதலின் அவரை இடைநிறுத்தி அடியவர்கள் முன் சென்று அப்பணியைச் செய்ய வேண்டும் என்கிறார் அடிகளார். 200, உலக்கை பல ஒச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே நலக்க, அடியோமை ஆண்டுகொண்டு நாள் மலர்ப் பாதங்கள் சூடத் தந்த மலைக்கு மருகனைப் பாடிப் பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே 6 ஒருவர் அல்லது இருவர் பொற்சுண்ணம் இடிக்கத் தொடங்கினால் ஓர் உால் போதுமானதாக இருக்கும். உலகிலுள்ள அடியவர் பலரும் பணி செய்ய வேண்டு