பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மென்று விரும்பி வந்தார்கள். ஆதலின், உலகமெலாம் உரலாக மாறினும் போதாது என்கிறார் அடிகளார். 203, சூடகம் தோள் வளை ஆர்ப்ப ஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 7 சூடகம்-கைவளை. பாடகம்-காலணி, ஆடகம்-பொன். இப்பாடலில் உலக்கையால் இடிக்கும் பெண்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் அவர்கள் உடலசைவிற்கு ஏற்ப அசைகின்றன என்பதை வரிசைப்படுத்துகிறார். இப்பாடலின் உயிர்நாடியாக உள்ள தொடர் நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப' என்பதாகும். இங்கு ஆர்ப்ப என்ற சொல் எள்ளி நகையாடி ஆர்ப்பரித்தல் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. - துறவுக்கோலம் பூண்ட அடியவர்கள் மிகுதியாகக் காணப்பட்ட அற்றை நாளில் அவர்களைக் கண்டு யாரும் நகைத்ததில்லை. அப்படியிருக்க, நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப' என்று அடிகளார் கூறக் காரண மென்ன? அன்றுமுதல் இன்றுவரை உலகிடைக் காணப்படும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுண்டு. நூற்றுக் கணக்கான அடியவர்கள் இருந்தும் அவர்களை யாரும் ஆர்ப்பரிக்கவில்லை. ஏன்? அவருடைய கோலம் இயல்பானது என்று மக்கள் கருதினர். ஆனால், அடிகளார் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சுத் தொழில் பூண்டிருந்தார். அதற்குரிய படா