பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 13 டோபங்களோடு அன்றுவரை வாழ்ந்தவர், திடீரென்று ஒரே நாளில் அனைத்தையும் துறந்து துறவு பூண்டுவிட்டார். திருப்பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சிதான் அவருடைய துறவுக்குக் காரணம் என்பதைப் பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. எனவேதான், மிக உயர்ந்த பதவியாகிய அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு ஆண்டி ஆனவரைக் கண்டு உலகத்தார் எள்ளி நகையாடுகின்றனர். இங்கு ஆர்ப்ப ஆர்ப்ப என்று பொதுவாகக் கூறினாரேனும், என்ன சொல்லி ஆர்த்தனர் என்பதைத் திருவாசகத்தின் பிற்பகுதியில் 431 ஆவது பாடலில் பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஒர் காரணம் இது கேளிர்’ என்ற இடத்தில் விரிவாகவே சொல்லியுள்ளார். அமைச்சுப் பதவியைத் துறந்து ஆண்டியான அடிகளாரைப் பயித்தியம் என்று உலகத்தார் ஏசினர் என்று தெரிகிறது. மகான்களை அவர்கள் காலத்தில் அறிந்துகொள்ளாத உலகம் இன்றும் அப்படித்தான் பேசுகிறது. அவர்கள் தம்மைப் பயித்தியம் என்று கூறவும் உண்மைப் பொருளை அறியாமல் உலக பந்தத்தில் ஈடுபட்டு அதுவே சதம் என்றிருக்கும் உலகத்தாரை நோக்கி உண்மை அறியாத பயித்தியங்கள் என்று அடிகளார் நகைத்தார். இதனையே நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப' என்ற தொடர் குறிக்கின்றது. 202. வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்கத் தோள் திருமுண்டம் துதைந்து இலங்கச் சோத்தெம் பிரான் என்று சொல்லிச் சொல்லி நாள்கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி ஆடப் பொற்கண்ணம் இடித்தும் நாமே 8