பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வாள்-ஒளி. வரி வளை- கீற்றுக்கோடுகூடிய வளையல். முண்டம்-நெற்றி, சோத்து-தோத்திரம். நாள் கொண்டமலர்தண்டோடு கூடிய தாமரை. இப்பாடலில் இலக்கியத்தில் அதிகம் காணப்பெறாத ஒரு சொல்லை அடிகளார் புகுத்துகின்றார். அடிமைத் திறத்தில் நிற்பவர்கள் தம்முடைய தலைவனை அல்லது எஜமானனைக் கண்டபொழுது “வணக்கம்’ என்று சொல்கின்ற மரபு அன்றில்லை. அதற்குப் பதிலாகத் 'தலைவனே! சோத்து' என்று கூறினர். இறைவன் யாவர்க்கும் தலைவன் ஆதலின் அவனிடம் அடிமைத்திறம் பூண்ட அடிகளார் 'சோத்து எம்பிரான்’ என்று கூறுகிறார். 203, வையகம் எல்லாம் உரல் அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச் செம்பொன் உலக்கை வலக் கை பற்றி ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 9 அட்டி-இட்டு. மெய்-உண்மை. சாதாரணமான மனிதர்களுக்குப் பூசும் பொடி இடிக்க வேண்டுமானால் சிறியதோர் உரலும் உலக்கையும் போதுமானதே யாகும். நாம் ரூபம் கடந்த பர்ம்பொருளை ஒர் உருவத்துடன் கற்பித்த காரணத்தால் அவனுக்கும் இவ்வாறு குறிப்பிட்ட அளவுடைய உரலில் பொடி இடித்தால் போதுமானது என்ற கருத்தில் இதுவரை பாடிவந்தார். 'இப்பொழுது இடிக்கப்படும் பொடி, யாருக்கு? என்ற நினைவு விரிவாக வந்தவுடன், அது தில்லைவாணனுக்கே