பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அடுத்து, தேவர்களுக்கு அடிகளார் கொடுக்கும் அடைமொழிகள் எள்ளற் குறிப்பை உடையன. வான் தங்கு தேவர்கள்’ ‘மூவாத தேவர்கள்’ என்ற இரண்டு அடைகளும் தேவர்களுக்குக் கொடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. வானில் தங்கிய காரணத்தால் தாங்கள் ஏதோ உயர்ந்தவர்கள் என்று கருதிக்கொண்டு, பாதாளம் ஏழினுங் கீழ் நீண்டுள்ள திருவடிகளைக் காண மறந்தனர். அடுத்துள்ளது, மூவாத தேவர்கள் என்பது. குறுகிய காலமே வாழக்கூடியவர்கள், எமக்குரிய வாழ்நாள் முழுவதும் திருவடிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டும், அது இயலவில்லை என்று கூறித் தப்பித்துக்கொள்ளலாம். இந்தத் தேவர்களுக்கு அதுவும் முடியாது. காரணம் மூப்பில்லாத தேவர்கள். அத்தகைய தேவர்கள் பண்டும், இன்றும், என்றும் காணமுடியாத திருவடிகள் என்க. எல்லாப் பாடல்களிலும் திருஉத்தரகோசமங்கை குறிப்பிடப்படினும், இப்பாடலில் உத்தரகோசமங்கை நாயகன் தங்குமிடம் இடைமருது என்கிறார். உத்தரகோசமங்கைக் கோன் நெஞ்சத்துள் நுழைந்தான். நுழைந்ததோடுமட்டும் அன்றி, ፵፰፻፴ሻ)6ሻፓ உருக்கும் செயலையும் செய்தான் என்று கூறவந்த அடிகளார், 'ஊன்தங்கி நின்றுருக்கும். கோன்’ என்கிறார். உள்ளம் உருகுதலாகிய செயல், தன் முயற்சியால் அன்றி அவனருளால் நடைபெற்றது என்பதைக் கூறவந்த அடிகளார் நின்று உருக்கும் எனப் பிறவினை வாய் பாட்டால் குறிக்கிறார். இனி, இந்த உருக்கத்தால் அடிகளார் நேரிடையாகப் பெற்ற பயன் ஏதேனும் உண்டா? உருக்கம் நிகழ்ந்த பின்னர், அந்த உள்ளம் உத்தரகோசமங்கைக் கோன் வந்து தங்குவதற்குரிய இடமாக ஆயிற்று என்பது உண்மைதான். இவற்றிடையே, அடிகளார் தம்மாட்டு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றையும் குறிப்பிடுகின்றார். தேன் தங்கி, தித்தித்து, அமுது ஊறி,