பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொன்னூசல் 191 தெளிந்து, ஊன் தங்கி நின்று, உருக்கினான் என்கிறார். நெஞ்சம் உருகும்போது தேனின் சுவையும், அமுதின் சுவையும் ஒன்று கலந்ததுபோன்ற ஒரு ᏭᎦ©Ꮘ) © 1öᏈ}ᏌL! அநுபவிக்க முடியுமா? அது இறையருள் இல்லாத உருக்கமாக இருந்தால், இச்சுவை கிடைக்காது. ஆனால், உத்தரகோசமங்கையான் வந்து, உள்புகுந்து, அங்கேயே நின்று, நெஞ்சை உருக்கினான். ஆதலால், அந்த உருக்கத்தில் தேன், அமுது ஆகியவற்றின் சுவை பிறந்தது என்கிறார். அம்மலரடிகள், தேன் தங்கும் மலரடிகள்; தித்திக்கும் மலரடிகள்; அமுது ஊறும் மலரடிகள்; தான் புகுந்த இடத்தை (அடியார் உள்ளத்தைத் தெளிவிக்கும் திருவடிகள்; அடியார்களுடைய உள்ளம் இருக்கும் உடலிலும் உள்புகுந்து உருக்கும் திருவடிகள் என்க. 331. முன் ஈறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம் பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை மின் ஏறும் மாட வியல் மாளிகை பாடி பொன் ஏறு பூண் முலையிர் பொன் ஊசல் ஆடாமோ 3 நீறு-அருள். மன் ஊற-நிலைபெற. 'முன் ஈறும் ஆதியும் இல்லான்’ என்ற தொடருக்கு இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். ஆதியும் ஈறும், ஈற்றுக்கு முன்னுள்ளதாகிய நடுவும் இல்லாதவன் என்பது ஒன்று. இரண்டாவது, ஆதியும் ஈறும் இல்லாத இவனுக்கு, முன்னேயுள்ளது (முன்) என்று எதுவும் இல்லாதவன் என்பது. 'முனிவர்களும் கோடிக் கணக்கான தேவர்களும் அவனருள் கிட்டுமா என்று காத்துக்கொண்டு நிற்க, தனக்கு உரித்தான திருநீற்றை தன் நீறு எனக்கு