பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அளித்தான். அதுவுமன்றித் தன் கருணை வெள்ளத்தில் மிகுதியும் ஊறும்படியாகச் செய்தான் என்றபடி, 332. நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன் மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை அம் சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணை செய்து, துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன் ஊசல் ஆடாமோ 4 துஞ்சல்-இறத்தல். புஞ்சம்-திரட்சி. வெள்வளை- சங்கினால் செய்தி விளையில் அடியார்களுடைய புறத்தே இருந்து காட்சி நல்குவதோடு, அவர்கள் நெஞ்சுள்ளேயும் சென்று தங்குகிறான். உள்ளத்துள் அமுது நிறைவது போன்ற சுவை தோன்றினமையின், அவன் நெஞ்சுள்ளே நின்றான் என்பது உணரப்படுகிறது. அவன் நிறைந்தபொழுது ஏற்படுகின்ற ஆனந்தம் ஒரு புறம். இது உத்தரகோசமங்கையான் அஞ் சொலாள் தன்னோடு உள்ளே புகுந்தபோது உடனடியாகக் கிடைத்த இன்பம். அன்றியும் உள்ளே புகுந்ததனால் கிடைத்த மற்றொரு பெரு நன்மை, பிறப்பும் இறப்பும் அற்ற நிலை எய்தியதாகும். 333. ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர் குழாம் நாணமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சு தனை ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கைக் கோண் ஆர் பிறைச் சென்னிக் கூத்தன் குணம் பரவி பூண் ஆர் வன முலையிர் பொன் ஊசல் ஆடாமோ 5 இருவர்-பிரம விஷ்ணுக்கள். கோணார் பிறை-வளைந்த பிறை,