பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொன்னூசல் 193 அயன், மால் என்ற இருவரும் அடிமுடி தேடப் புறப்பட்டபொழுது எதிரே நிற்கும் உருவம் ஆணோ, பெண்ணோ அலியோ என்றுகூட அறிந்துகொள்ள முடியாதபடி ஓங்கி நின்றவன் கடவுள். இந்த இடத்தில் கடவுள் என்ற சொல்லை அடிகளார் பயன்படுத்தியது மிகச் சிறந்த கருத்தை அறிவிப்பதாகும். எதிரே நின்ற உருவம் அயன், மால் ஆகிய இருவருக்கும் கட்புலன் ஆகும்படி ஒரு வடிவு பெற்று நின்றமையால் கடவுள் என்ற சொல்லின் பிற்பகுதியாகிய 'உள்' என்பது பொருத்தம் ஆகிறது. அதாவது அந்த வடிவம் எது என்று அவர்கள் அறியாவிட்டாலும் கண்ணால் காணக்கூடிய வடிவில் நின்றதால், அவர்கள் கண்ணின் உள்ளும் கருத்தின் உள்ளும் புகுந்து நின்றதாதலின், கட+உள் என்ற சொல்லின் பிற்பகுதிக்கு விளக்கமாயிற்று. இனி, அவ்விருவரின் சிந்தனை, அறிவு, கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்து நின்றதால் கடவுள் என்ற சொல்லின் 'கட' என்னும் முற்பகுதிக்கும் பொருளாயிற்று. தங்கள் முயற்சியாலேயே அமுதத்தைப் பெற்றுவிட லாம் என்று கருதிக்கொண்டு பாற்கடலைக் கடைய முற் பட்ட தேவர்கள் ஆலகாலம் (விடம் தோன்றியவுடன் அஞ்சி நடுங்கினர். முன்னர்ச் சிவபெருமானை உதவுமாறு வேண்டாத தேவர்கள் இப்பொழுது சிறிதும் வெட்கமடை யாமல் அவனிடம் சென்று வேண்ட, அவர்கள் உய்யுமாறு, ஆலத்தைத் தான் உண்டு அவர்களைக் காத்தான் என்க. 334. மாது ஆடு பாகத்தன் உத்தரகோசமங்கைத் தாது ஆடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவித் தீது ஒடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான் காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால் போது ஆடு பூண் முலையிர் பொன் ஊசல் ஆடாமோ 6