பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 'உமையொரு பாகனாக நின்ற பெருமான், குருநாதர் வடிவில் வந்து அனைத்தையும் கடந்து நின்ற அடியார் நடுவில் என்னையும் இருத்தினான். அவருடன் இருப்பதற்கு இடையூறாக நின்ற என் குற்றங்களைத் தன் அருட்பார்வையால் போக்கினான். அப்படி ஆட்கொண்ட நிலையில், தொடர்ந்து வருகின்ற என் பிறவித் தொடரில் இருந்த சஞ்சித, பிராரத்வ வினைகளையும், இப்பிறவியில் நான் செய்யும் செயல்களுக்குப் பயனாக வரும் ஆகாமிய வினையையும் போக்கினான். அதன் பயனாக என்னுடைய பிறப்பையும் அறுத்தான். சஞ்சித வினையை வைப்புத்தொகை போல் வைத்துவிட்டு, அதில் ஒரு பகுதியை நடைமுறைக் கணக்குப்போல இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காகக் கொண்டு வருவதைப் பிராரத்துவம் என்பர். இந்தப் பிராரத்துவ வினையை அனுபவித்துக்கொண்டே வாழ்க்கை நடைபெறுகிறது. இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப ஆகாமிய வினை பரிணமிக்கின்றது. இந்த ஆகாமிய வினை, ஒரு பிறப்பில் அன்றாடம் விரிவடையக்கூடிய ஒன்றாகும். ஏனென்றால் இப்பிறப்பில் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் சில பல செயல்களைச் செய்ய வேண்டியிருத்தலின், அதன் பயனாக விளையும் ஆகாமிய வினை நாள்தோறும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இது வளர வளர அடுத்த பிறவிக்கு இது வித்தாகிவிடும். ஆகாமிய வினையைக் களைந்தாலொழியப் பிறப்பு -ԶԱՈ/ւ-Iւ- வாய்ப்பு இன்மையால் தொல் பிறவித் தீது ஒடா வண்ணம் (செய்து திகழப் பிறப்பு அறுப்பான்’ என்கிறார். 335. உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை மன்னிப் பொலிந்து இருந்த மா மறையோன் தன் புகழே