பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொன்னுரசல் 195 பன்னிப் பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான் அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணி மயில் போல் என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில் பாடி பொன் ஒத்த பூண் முலையிர் பொன் ஊசல் ஆடாமோ 7 'அந்தணக் கோலத்தில் வந்து ப்ெருந்துறையில் ஆட்கொண்டவன் உத்தரகோசமங்கையான். ஆதலால், அழகிய பெண்களே! இரண்டு பக்கங்களிலும் அன்னத்தின் வடிவம் செய்து அலங்கரிக்கப்பெற்ற ஊசலில் இள மயில் போல் அமர்ந்து, அவன் புகழைப் பாடிக்கொண்டு ஆடுவீர்களாக’ என்றபடி 336. கோல வரைக் குடுமி வந்து குவலயத்துச் சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து ஞாலம் மிகப் பரி மேற்கொண்டு நமை ஆண்டான் சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடிப் பூலித்து அகம் குழைந்து பொன் ஊசல் ஆடாமோ 8 கோலவரைக் குடுமி வந்து-அழகிய கைலையுச்சியினின்றும் குருமேனிதாங்கிவந்து. அமுதுண்டு-உணவை உண்டு. தாழ்கடலின் மிதெழுந்து-தாழ்ந்த கடலலையைப்போல மேலெழுந்து தாவி, ஞால மிகஉலகம் உயர. பரிமேற்கொண்டு-குதிரைமீது ஏறி. பூலித்து-பூரித்து, ரகர லகரப்போலி. வாலாயமாகப் பொருள் கூறுவதோடு அல்லாமல், பின்வருமாறும் பொருள் கூறலாம்: 'கோலவரைக் குடுமி என்றதால் மலைச்சிகரம் போன்ற எட்டாத நிலையும் பெருமிதமும் உள்ள ஒரு பொருள் பேசப்பெறுகிறது. அது தன் பெருமிதத்தை விட்டு விட்டு அனைவரும் கண்காணுமாறு மிகச் சாதாரணமான குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் பரிசுப் பொருளையும் பெற்றுக்கொண்டது. அந்தக் குடுமி இதை