பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மட்டுமா செய்தது? பிட்டு வாணிச்சியின் பிட்டமுதை உண்டதும் அந்த வரைக்குடுமியின் எளிவந்த தன்மைக்கு மற்றும் ஒர் எடுத்துக்காட்டாகும். வந்திக்குக் கூலியாளாய் வந்தது மக்கள் செய்யும் பணியில் மிகமிகத் தாழ்ந்த நிலையில் உள்ளதாகும். வரைக் குடுமி மேற்கொண்ட இந்த இரு பணிகளும் அடிகளார் கண்காண் நடந்தவையாகும். இனி, அடிகளார் தாம் காணாவிட்டாலும் செவிவழியாகக் கேட்ட செய்தி ஒன்றுண்டு. மீன் வலையை வீசுபவனாக, அக்குடுமி வந்த நிகழ்ச்சியாகும் அது. இதனை வரிசைப்படுத்திக் கூறிக்கொண்டு வந்த அடிகளாருக்குக் கோலவரைக் குடுமி தன் நிலையில் இருந்து இறங்கி இப்பணிகளை ஏன் மேற்கொண்டது என்ற வினாத் தோன்றியதுபோலும். அந்த வினாத் தோன்றிய பொழுது அதற்கு விடையும் கிடைத்துவிட்டது. நம்மை ஆட்கொள்ளத்தான் இத்தனையும் செய்தது என்பதே அந்த விடை. இந்த விடையைச் சொல்லும்பொழுது பரிமேற்கொண்டு எனை ஆண்டான் என்றல்லவோ சொல்லியிருக்க வேண்டும்? அதுதானே நடந்தது? அப்படியிருக்க எனை என்ற தன்மை ஒருமைக்குப் பதிலாக நமை என்று தன்மைப் பன்மையை ஏன் பயன்படுத்தினார் என்று சிந்தித்தால், ஓர் உண்மை விளங்கும். இதுவரை பலப்பல பாடல்களில், நான் என்றும் எனை என்றும் ஒருமையில் தொடங்கி, நம் என்றும் எமை என்றும் பன்மையில் முடித்திருப்பதைக் கண்டோம். அவ்விடங்களில் வரும் பன்மை, பன்மையன்று, ஒருமைதான் என்று முன்னர் விளக்கியுள்ளோம். ஆனால், இந்தப் பாடலில் வரும் நமை ஆண்டான்' என்பது உண்மையிலேயே பன்மைப் பொருளில்