பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொன்னுரசல் 197 பயன்படுத்தப் பெற்றதாகும். ஒரு விநாடி சிந்தித்தால் இதன் அடிப்படை விளங்கிவிடும். - * கோலவரைக் குடுமி கூலியாளாய் வந்து அடிகளாருக்குமட்டுமா காட்சி தந்தது? அதற்கு முன்னரே பிட்டு வாணிச்சிக்கு அக்காட்சி கிடைத்தது. அவள் வீட்டை அடைவதற்குமுன்னர்க் "கூலி கொள்வார் உண்டோ என்று ஒலமிட்டுக் கொண்டு ஆலவாய் வீதிகளில் நடந்துவந்ததே, அந்தக் காட்சியை எத்தனை பேர் கண்டிருப்பார்கள்! வந்தியின் பிட்டமுதைத் தின்றுவிட்டு வையைக் கரையடைக்கச் சென்றவிடத்தில் சக கூலியாட்கள், வேலை வாங்கும் மேற்பார்வையாளர்கள், பார்க்க வந்த அமைச்சர்கள், இறுதியாக வேலை நடைபெறுவதைப் பார்க்க வந்த பாண்டி மன்னன் ஆகிய இத்தனை பேருக்கும் ஒரு நாள் காலையிலிருந்து மாலை வரை கோலவரைக் குடுமி காட்சி தந்துகொண்டிருந்தது அல்லவா? இந்த ஊனக் கண்களால் வரைக் குடுமியைக் கண்டவர் அனைவரும் அவன் அருளைப் பெற்றவர்கள் ஆகிவிட்டனர். இத்தனை நூற்றுக் கணக்கானவர்களுக்கு ஒரே நாளில் தரிசனம் தந்து அவர்களை ஆட்கொண்டான் ஆதலின் நமை ஆண்டான்' என்று பாடுகிறார் அடிகளார். 337. தெங்கு உலவு சோலைத் திரு உத்தரகோசமங்கை தங்கு உலவு சோதித் தனி உருவம் வந்தருளி எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொள்வான் பங்கு உலவும் கோதையும் தானும் பணி கொண்ட கொங்கு உலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப் பொங்கு உலவு பூண் முலையிர் பொன் ஊசல் ஆடாமோ 9 தெங்கு-தென்னை. எந்தரமும்-எத்தகைய நிலையிலும்; எங்கள் நிலையிலும் எனினுமாம். பங்கு-பாதி. கோதை-கோதை போன்றவராகிய உமாதேவியார். கொங்கு-தேன்.