பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 'திருஉத்தரகோசமங்கையில் தங்கியுள்ள சோதி வடிவான அப்பொருள், நடமாடுகின்ற ஈடு இணையற்ற மானிட குருநாதர் வடிவம் எடுத்துக்கொண்டது. அதே வடிவுடன் எங்கள்மாட்டு வந்தருளி எல்லாத் தரத்தில் உள்ளவர்களையும் ஆட்கொள்ள முனைந்தது. எங்கள் பிறப்பை அறுத்து எங்களைப் பணி கொண்ட கொன்றைச் சடையானைப் பாடுவீர்களாக, இப்பாடலில் வரும் எந்தரமும் ஆட்கொண்டு என்ற தொடர், மிகத் தாழ்ந்த நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்வரை அனைவரையும் ஆட்கொண்டான் என்ற பொருளைத் தருவதாகும். சென்ற பாடலில் நமை ஆண்டான்' என்பதற்குக் கூறிய பொருள் இதில் வலுப்பெறுவதைக் காண்க ‘எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்’ என்றும், நமை ஆண்டான்' என்றும் (திருவாச-33) அடிகளார் பல இடங்களில் கூறுவது. அவருடைய கனிந்த உள்ளத்தில் தோன்றிய கருத்துக்களாகும். 'நாயினும் கடையேன்” என்று பல இடங்களில் தம்மைச் சொல்லிக்கொள்கின்றார். ஆதலின் தம்மைப் போன்ற கடையவனுக்கே குருநாதர் அருள்கிட்டியது என்றால் உலகத்தில் உள்ள எல்லா உயிர்கட்கும் அது கிட்டியிருக்கும் என்று நினைத்ததிலும் தவறில்லை. அவ்வாறு பாடியதிலும் தவறில்லை. ওঁ ওঁ ওঁb