பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 முதலியவற்றிற்கும் புதிய முறையில் பொருள் கூறியுள்ளோம். 'அன்னே!’ என்று வரும் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு, தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது என்று கூறுவது பொருத்தமாக இல்லை. சங்கப்பாடல்களில் வரும் அன்னை, அன்னாய் என்ற சொற்களுக்கும், இப்பகுதியில் வரும் அன்னை, அன்னே என்ற சொற்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. இறையுணர்வில் ஈடுபட்டு, முற்றிலும் அதனுள் அமிழ்ந்துவிடாமலும், முற்றிலும் அதனை விட்டு வெளியே வந்து தான்’ என்ற தன்முனைப்புடன் தொழிற்படுகின்ற நிலைமை இல்லாமலும், இரண்டினுடைய எல்லையிலும் நின்று பேசும் ஒருத்தியின் கூற்றாகும் இப்பாடல்கள். அவள் штGёдгт ஒருவரை முன்நிறுத்தியோ, குறிப்பிட்டோ, அழைத்தோ இவற்றைச் சொல்லியதாகத் தெரியவில்லை. தன்னுடைய உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சி வேறுபாட் டால் அநுபவ நிலையிலிருந்து வெளிப்பட்ட அவள், அதன் விளிம்பில் நின்று பின்னோக்கிப் பார்க்கும்பொழுது, அவள் வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களாகும் இவை இச்சொற்கள் தன்னை வேறுபடுத்திக்கொண்டு நின்று நெஞ்சொடு கிளந்தவை ஆகும். இதில் வரும் 'அன்னே என்ற சொல் ஆற்றாமைபற்றி வரும் 'அம்மா’ என்ற சொல்லின் மற்றொரு வடிவமாகும். இங்கு அடிகளார் இறையனுபவம் பெற்ற ஒரு தலைவியாகத் தம்மை உருவகித்துப் பாடுகிறார் என்க. - இவ்வாறு பொருள் கொள்ளும்போது பாடல்கள் தோறும் வரும் என்னும் என்ற சொல்லைப் பாடலின்