பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைப் பத்து 201 இசை நிறைக்க வந்த சொல்லாகவும், நின்றுவற்றும் சொல்லாகவும் கொள்ளவேண்டும். 338. வேத மொழியர் வெள் நீற்றர் செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதர் இந் நாதனார் அன்னே என்னும் f நாதப்பறையினர்-நாத தத்துவத்தில் விளங்கும் ஓங்காரத்தைப் பறையாகக் கொண்டவர். சிவபெருமான் எப்பொழுதும் இருக்கு வேதத்தைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறான் என்பது தேவாரம் முதல் பிரபந்தம் வரையிலுள்ள பல அருளாளர்கள் பாடலில் காணப்பெறும் ஒன்றாகும். 'இருக்கு இலங்கு திருமொழிவாய்+எண் தோள் ஈசற்கு” (நாலா:1505) என்பது திருமங்கை ஆழ்வார் வாக்கு. வேத மொழியர் என்று அடிகளார் கூறியது பழைய மரபுபற்றிக் கூறப்பட்டதாகும். 'வெண்ணிற்றர் செம்மேனி யர்' என்பது முரண் அழகு கொண்டது. அடுத்துள்ள 'நாதப் பறையினர் என்ற தொடர், ஆழ்ந்த கருத்துடையதாகும். இங்கு நாதம் என்ற சொல் ஓசை, ஒலி என்ற சாதாரணப் பொருளைத் தாராமல், ஆதி நாதத்தையே குறிப்பதாகும். அதாவது எல்லா ஒலிகளுக்கும் மூலமாக இருக்கின்ற ஒன்றைத் தனது வாத்தியமாக, அதாவது பறையாகக் கொண்டவன் என்பதால் நாத தத்துவத்தைக் கடந்து நிற்பவன் என்பதும் நான்முகன் திருமால் ஆகியோர்க்குத் தலைவன் என்பதும் பொருளாயிற்று. ஆதிநாதத்திற்கு அப்பாற்பட்டவன் இவன் ஒருவனே என்க. -