பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நாதப் பறையினர் என்று கூறியவுடன், அதனுடைய உண்மையான பொருளை அறிய முற்படாமல், சாதாரண ஒலியை உண்டாக்கும் பறை என்ற கருவியைக் கையில் பெற்றவன் என்று பொருள் செய்துகொள்ளவும் இடமுண்டு அல்லவா? அந்தப் பொருளையே மனத்தில் கொண்டு சாதாரணப் பறையை உடையவன் என்று பொருள் கொண்டாலும் சரி. எது எப்படியானாலும் உண்மையில் அவனே நான்முகன், திருமால் ஆகிய இருவருக்கும் தலைவனாக உள்ளான் என்பதை அறிக. நாதம் என்பதற்கு வாக்கு என்றும் பொருள் கொள்ளலாம். 'அந்த வாக்குத் தேவதையாக நிற்கும் கலைமகளுக்கும், அவள் தலைவனாக இருக்கும் நான்முகனுக்கும், அவனை ஈன்ற திருமாலுக்கும் இந்த வெண்ணிற்றுச் செம்மேனியன் நாதனாக உள்ளான் என்பதை நெஞ்சே நீ அறிவாயாக’, தலைவி, முன்னர்க் கூறியதுபோல, இறையனுபவத்தில் ஒட்டி இருந்த நிலை நீங்கி, வெளிப்பட்டு, விளிம்பில் நின்று பின்னோக்கிப் பார்ப்பதின் விளைவு இச்சொற்கள். 'அம்மம்மா! எனக்கு இந்தப் பேரானந்த அனுபவத்தைத் தந்தவன் இதோ என் மனக்கண் முன் நிற்கின்றான். அவன் வாய் வேதத்தைப் பாடுகிறது. அவன் செம்மேனியில் வெண்ணிறு அணிந்துள்ளான். அவன் கையிலுள்ள பறையிலிருந்து வெளிப்படும் நாதம், என்னைமட்டுமா ஈர்க்கின்றது? அம்மம்மா! நான்முகன், திருமால் ஆகிய இருவரும் இந்த நாதத்தில் கட்டுண்டல்லவா உள்ளனர்? என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் நற்றாய், செவிலித் தாய், தோழி ஆகிய பாத்திரங்களை இங்கே கொண்டு வந்து இடர்ப்படத் தேவை இல்லை. அன்னே என்பது