பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இந்த மூன்று விடைகளிலும் கூறப்பெற்ற தலைவன், பருவுடலோடு எதிரே நிற்பவனாகவும் தெரியவில்லை. 'அம்மம்மா! அவன் என் உள்ளே நின்று உருக்குகிறான் என்பதை எப்படி அறிந்துகொண்டேன் தெரியுமா? முதலா வதாகக் கண்ணிர் பெருகத் தொடங்கியது. இது பலருங் காண, புறத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். பிறர் அறியா வண்ணம் உள்ளேயும் ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது. பிறந்த திலிருந்து எத்தனையோ மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றை அநுபவித்தது உண்டு. ஆனால், சிறிது நேரத்தில் அவை மாறி கவலை, துன்பம் என முடிந்துவிட்டன. இப்பொழுது இந்தக் கண்ணிர் வெளிப்படுவதற்குக் காரணமாய் இருந்தது எது தெரியுமா? உள்ளத்தின் ஆழத்தில் தோன்றிய ஆனந்தமாகும். ஆனந்தம் என்று கூறியவுடன் அதிகப்படியான மகிழ்ச்சி என்று பொருள் செய்துவிடாதே. இது மகிழ்ச்சியோ, இன்பமோ அன்று. அவையெல்லாம் நிலையில்லாதவை. ஆனால், இது மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றினின்று வேறுபட்டதும் நிலையானதுமாகிய ஆனந்தம் ஆகும். இப் பாடலில் வரும் அன்னை என்பது விளியாக நின்றது-முன்னர் அவ்வாறில்லை. எவ்வளவு ஆழ்ந்த காதலாயினும் அது உலகியற் காதலாக இருக்கும்பட்சத்தில், தலைவன் தந்த இன்பத்தை ஆனந்தம் என்றோ, உலப்பில்லா ஆனந்தம் என்றோ கூறுதல் இயலாத காரியம். எனவே, தொல்காப்பியத்ேையா, வேறு இலக்கண நூலையோ வைத்துக்கொண்டு அந்த அடிப்படையில் பொருள் காண்பது பொருத்தமற்ற தாகிவிடும்.