பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைப் பத்து 205 340. நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத்து இருப்பரால் அன்னே என்னும் சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும் 3 'அம்மம்ம! என் உள்ளே புகுந்து என்னை ஆட்கொண்டவர் நித்த மணாளர் என்று அறிந்தேன். உலகியல் தலைவர்களைப் போலல்லாமல் என்றும் மாறாத, ஒருபடித்தான அழகைப் பெற்றவர். அந்த அழகை மானிட அழகோடு ஒப்பிடுவதோ, அல்லது விவரிப்பதோ இயலாத காரியம். வேறு வழியே இல்லாத காரணத்தால் நிர்ம்ப அழகியர் என்று கூறி நிறுத்திவிடுகிறேன். நிரம்ப' என்ற சொல் ஒப்பு நோக்குச் சொல்லாகும். உன் கற்பனை எவ்வளவு விரிந்து சென்றாலும், அந்த அளவுக்கு விரிந்து செல்வதைத்தான் நிரம்ப என்ற சொல்லால் குறிக்கிறோம். நித்த மணாளராகவும், நிரம்ப அழகியராகவும் உள்ள இவரைப் புறக்கண்களால் காணவேண்டும் என்று துடிக்கிறாயா? அது நம்மால் முடியாத காரியம். காரணம் அவர் என் சித்தத்துள்ளே இருக்கிறார். அவரை உனக்குக் காட்ட முடியாவிட்டாலும் அவரது பெயரையாவது அறிந்துகொள்ள விரும்புகிறாயா? இதோ சில பெயர்களைச் சொல்கிறேன் கேள். தென்னன், பெருந்துறையான், அத்தர், பெருந் துறையில் உறைகின்ற அத்தர், ஆனந்தமே வடிவானவர் என்பவை அவர் பெயர்களுள் சிலவாகும்’ என்க. 341. ஆடு அரப் பூண் உடைத் தோல் பொடிப் பூசிற்று ஒர் வேடம் இருந்த ஆறு அன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டு கண்டு என் உள்ளம் வாடும் இது என்னே அன்னே என்னும் 4