பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆடு அர பூண்-ஆடுகின்ற பாம்பாகிய ஆபரணம். உடை தோல்உடுத்த உடை புலித்தோல். நித்த மணாளராக உள்ள அத்தலைவனின் மற்றொரு வேடம் இது. தலைவியின் உள்ளத்துள்ளே அவனை வைத்துக் காண்கின்ற காட்சி மேலும் மேலும் விரிகின்றது. "நித்த மணாளன் என்றும், எல்லையற்ற அழகுடையவன் என்றும் பேசப்பெற்ற ஒருவனுக்கு இப்படியும் ஒரு வேடம் உண்டு என்பதை என் உள்ளத்தளவில் காண்கிறேன். ஆடு அரவத்தைப் பூணாக அணிந்தவன், திருநீற்றை உடல் முழுதும் பூசியுள்ளவன், தோலை உடையாக உடுத்தியவன் என்ற முறையில் அவனை என்னுள் கண்டேன். ஆகா! என்னுள்ளம் ஆடத் தொடங்கிவிட்டது. நிரம்பிய அழகைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் அமிழ்ந்திருந்த என்னுள் இப்படி ஒரு கோலம் காட்சியளித்தவுடன் என் உள்ளம் ஆடத் தொடங்கியது நியாயமா? இது என்ன முறை?-என்ற வினாவை என்னுள் எழுப்புகின்றேன். நிரம்ப அழகிய கோலம்தான் அவனது உண்மையான வடிவம். இப்பொழுது காண்கின்றது அவன் அணிந்துள்ள வேடமே ஆகும். இந்த வேடத்தினுள்ளே நிரம்ப அழகியான் உள்ளான் என்பதை நான் உணர்கின்றேன். ஆனால், இந்த நிலையில் அவனைக் காணுந்தோறும் காணுந்தோறும் இந்த வேடம் அவனது இயல்பான வடிவன்று என்பதை அறிந்திருந்தும்கூட என் உள்ளம் வாடுவது ஏன்? என்கிறாள் தலைவி. 342. நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டி நல் நாடரால் அன்னே என்னும் பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை ஆண்டு அன்பு செய்வரால் அன்னே என்னும் 5