பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆனால், நம்முடைய சிந்தையை ஆண்டவர், நீண்ட கரத்தராக இருப்பதால், விரிந்து பரந்து செல்லும் சிந்தையை ஒரே எட்டில் பிடித்துத் தன் திருவடிகளில் அடக்கி, அந்தச் சிந்தையோடு சேர்ந்து நம்மையும் ஆண்டு கொள்கிறார். ஏன் அவர் இவ்வாறு செய்ய வேண்டும்: அவருடைய அருள் காரணமாகவே இது நடைபெற்றது. என்கிறார். இறைவனைப்பற்றிக் கூறும்பொழுது அருள் என்று தானே கூறவேண்டும், அன்பு என்று அடிகளார் கூறியுள்ளாரே என்றால், அருளுக்கு வித்தாய் இருப்பது அன்பு. ஆதலின், அருள் என்பதற்குப் பரியாயமாக அன்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். வள்ளுவரும் 'அருள் என்னும் அன்பு ஈன் குழவி (குறள் 757) என்றுதானே கூறிப் போனார். - 343. உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர் - மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார் என்ன அதிசயம் அன்னே என்னும் 6 உன்னற்கு அரிய சீர்-நினைத்தற்கு அரிய புகழ். மன்னுவதுநிலைபெறுவது. 'சிந்தனைக்கு எட்டாத சிறப்பினை உடைய உத்தர கோசமங்கைப் பெருமான், என் நெஞ்சில் புகுந்து நிலை பேறாக உள்ளார். 'நிலைபேறாக உள்ள அப்பெருமான், மால், அயன் என்ற இருவராலும் காணமுடியாதவராயினும் என் நெஞ்சினுள் வந்து தங்கியிருப்பது என்ன அதிசயம்’ என்றபடி,