பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைப் பத்து 209 நெஞ்சில் மன்னி இருப்பவரை மால், அயன் காண்கிலார் என்ற கூறுவதில் ஒரு நயம் அமைந்துள்ளதைக் காணலாம். காண்கிலார் என்பது, கண்ணால் என்ற சொல்லை அவாவிநிற்றலின் அவர்கள் தேடியது புறக்கண் னால் என்க. அவர்கள்கூடப் புறக்கண்ணால் அடி முடி தேட முயன்ற முயற்சியைக் கைவிட்டு அகக்கண்களைத் திறந்து அப்பார்வையை உள்ளத்துள் செலுத்தியிருப்பாரா யின் ஒருவேளை அவர்கள் கண்டிருக்கக்கூடும் என்ற கருத்தும் இதனுள் அமைந்திருத்தலைக் காணலாம். 344. வெள்ளைக் கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற் கொண்டு என் உள்ளம் கவர்வரால் அன்னே என்னும் 7 கலிங்கம்-உடை, முண்டம்-நெற்றி, குப்பாயம்-மேல்சட்டை பள்ளிஉறங்குமிடம், பள்ளிக் குப்பாயத்தர்-படுக்கை விரிப்பாகக் கொண்டு அதன்மேல் உறங்குபவர் ‘பரிமேல் அமர்ந்து வந்த சேவகனாய், வெண்மையான உடையை சல்லடமாக குறுகிய கால்சட்டை அணிந்து, நெற்றியில் திருநீறு விளங்கக் குப்பாயம் என்று சொல்லப் படுகின்ற கழுத்து முதல் கால் வரை நீண்ட அங்கியை அணிந்து, என் உள்ளத்தை இக்கோலத்தில் கவர்ந்தார்’ oralsTao, 345. தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆள் எம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில் தாளம் இருந்த ஆறு அன்னே என்னும் 8 தாளி அறுகு-விரிந்து படரும் அறுகு. தாளம்-கைத்தாளம்.