பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைப் பத்து 211 நின்றவர் போனபின்னர் என் மனம் ஏன் அவரை நினைந்து தைகின்றது என்று தெரியவில்லை'. தையலை ஒரு பங்கில் ஏற்பது இல்லறம் எனப்படும். தாபத வேடம் துறவறம் என்று சொல்லப்பெறும். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு எதிரெதிர்த் திசையில் செல்பவை என்று உலகில் உள்ள பலரும் இன்றுவரை கருதியும், கூறியும் வந்துள்ளனர். தமிழர், தமிழர் கண்ட சமயம் என்ற இரண்டிலும் ஒரு தனிச்சிறப்பைக் காணலாம். அறம், பண்பாடு என்பவற் ஹிற்குக்கூட உலகில் வேறு யாரும் சொல்லாத தனித்துவம் வாய்ந்த பொருளைக் கூறினர் இத் தமிழர். உலகில் உள்ள எச்சமயத்தவரும் இறைவனை ஆண், பெண் வடிவுடன் அர்த்ததாரியாக, அம்மையப்பனாகக் கண்டதுமில்லை; கூறியதுமில்லை இறைவன் ஆணாகவே உள்ளான் என்று கூறினர். இதன்படி பார்த்தால் முரண்பாடு என்று சொல்லப்பட்ட இரண்டினிடையே இறைவனைக் காணும் சிறப்பு இத்தமிழர்களிடையே என்று முதலோ இருந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. இந்த முரண்பாட்டைத்தான் அடிகளார் தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்' என்று கூறுகிறார். 347. கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே இன்று எனக்கு ஆன ஆறு அன்னே என்னும் {{} கூவிளம்-வில்வம், மத்தம்-ஊமத்தம் பூ , உன்மத்தம்- பயித்தியம், துன்றிய-நெருங்கிய.