பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஒன்றுக்கொன்று வேறுபட்ட இயல்பினையுடைய கொன்றை மலரையும், வில்வத் தழையையும், ஊமத்தம் பூவையும், இளம்பிறைச் சந்திரனையும் நெருக்கமாகத் தலையில் அணிந்துள்ளவர். 'ஓர் அதிசயம்! அவர் வருவதற்குமுன் நான் நன்றாகத் தான் இருந்தேன். ஊமத்தம் பூ அவர் தலையில்தான் இருந்தது. அம்மம்ம! அவர் வந்துபோனபின் அந்த ஊமத்தம் பூவால் ஏற்படும் உன்மத்தம் என்னைப் பற்றிக் கொண்டது என்றவாறு. - ওঁ ওঁ ওঁb