பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. குயிற் பத்து |ஆத்தும விரக்கம்) குயிற்பத்தும், திருக்கோத்தும்பியைப் போல உள்ள பகுதியேயாகும். கோத்தும்பியில் இரண்டு பாடல்கள் தலைவி தன் துயரைத் தலைவனுக்கு எடுத்துச் சொல்லுமாறு தும்பியை விளித்துக் கூறுவதுபோல அமைந்துள்ளன. இதனை மட்டும் வைத்துக் கொண்டு வண்டைத் துரதனுப்பியதாகப் பொருள் கூறுவது பொருத்தமா என்பது சிந்திக்கற்பாலது. பலதுறைகளில் முன்னர் யாரும் செல்லாத வழிகளில் அடிகளார் சென்றுள்ளார். சிறுமியரின் எண்ண ஓட்டங்களை மனத்துட்கொண்டு அவர்கள் பயன்படுத்தும் இசையையே அடிப்படையாகக் கொண்டு அம்மானை முதலிய பாடல்கள் இயற்றப்பெற்றன அல்லவா? அதேபோலத்தான் குயிற்பத்தும் இயற்றப்பெற்றது. ஏனைய பறவைகள் குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூவும் இயல்புடையன. இந்தக் கூவுதலே அவை தம்முள் பேசிக்கொள்ளும் மொழி யாகும் என்று இற்றைநாள் விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால், குயில் இவ்வாறில்லை. அது இருக்குமிடம் தெரியாமல் எங்கோ மரக்கிளைகளில் அமைதியாக இருந்து கொண்டு, அடிக்கடி கூவிக்கொண்டே இருக்கும். உணவுக்காக மட்டும் குயில் கூவுவதில்லை. வசந்த காலத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி காரணமாகத் தனியே இருந்துகொண்டு குயில்கள் கூவுகின்றன. வேறு எந்தப் பயனையும் கருதி அவ்கூவுதல்