பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வெளிவரவில்லையாதலால், இப்பொழுது அடிகளார் குயிலுக்கு அறிவுரை கூறு முறையில், சில கருத்துக்களைப் பேசுகிறார். நிலையில்லாத மகிழ்ச்சியில் கூவிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், இறைவனுடைய கருணையை அறிந்துகொண்டு அவனை வருக என்று கூவுவாயாக என்கிறார். - "வரக்கூவாய்’ என்பதிலும் ஒர் அழகு அமைந்துள்ளது. எத்துணை முயன்றாலும், எந்தக் குயிலும், எந்த ஆன்மாவும் அவன் இருக்குமிடத்தைத் தாம் சென்று அடைய முடியாது. எனவே, தங்களை நாடி அவன்தான் வரவேண்டும். ஆதலால் வரக் கூவாய்' என்று பாடுகிறார் அடிகளார். - குயில், மிகப் பெரிய மரத்தில் எங்கோ ஒரு கிளையில் அமர்ந்திருப்பதால், மிகச் சிறிய வடிவுடைய அதனைக் கண்ணால் காண்டது கடினம். ஆனால், அதன் கூவுதலை அனைவரும் கேட்க முடியும். அதேபோல, எண்சாண் உடம்பினுள் இந்த ஆன்மா எங்கே இருக்கிறதென்று கண்டு கொள்வது கடினம். இந்த ஆன்மாவும் பொறி, புலன்களில் சிக்குண்டு பொழுதை அவமே போக்காமல் அவனைத் தன்பால் வருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் குயிற்பத்தில் அமைந்துள்ளது. 348. கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால் சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற w - தொன்மை ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம் இலான் வரக்கூவாய் 1