பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிற் பத்து 215 தொன்மை ஆதி-பழைமையும் முதலும். மரக்கிளையில் உயரத்தில் அமர்ந்திருக்கும் குயிலைப் பார்த்து, “ஏ குயிலே! எங்கள் பெருமானின் பாதம், கீழுள்ள ஏழு உலகங்களையும் தாண்டிச் செல்லும். அவனுடைய திருமுடியோ, சொல்லுக்கும் கற்பனைக்கும் அடங்காமல் மேலே செல்லுகிறது. இவ்வாறு வடிவத்தைக் கூறியவுடன் ஏனைய வடிவங்களுக்குரிய குணங்குறிகள் உள்ளவன் என்று நினைத்துவிடாதே. அவன் ஆதியும், அந்தமும் இல்லாதவன். எந்தக் குணமும் இல்லாதவன் நிர்க்குனன்). இப்பொழுது ஒரளவுக்கு அவனைப்பற்றிச் சிந்திக்கச் இல அடையாளங்கள் கிடைத்துள்ளன அல்லவா? இவற்றை வைத்துக் கொண்டு நீ அவனை வருமாறு கூவுவாயாக’ என்று பாடுகிறார். 'சொல் இறந்து நின்ற தொன்மை' என்ற தொடர் சிந்திக்கத்தக்கது. சொல்லிறந்து என்றவுடன், சொல்லுக்கு அடங்காததாய் என்று வாலாயமாகப் பொருள் கூறி வருகிறோம். இங்கே சொல்’ என்பது, அது தோன்றுகின்ற இடமாகிய எண்ணத்தைக் குறிப்பது. எண்ணம் என்பது எத்தகைய எல்லைக்கும், வரம்புக்கும் கட்டுப்படாமல் மேலும் விரிவடையக் கூடியது. எவ்விதக் கட்டுப் பாட்டுக்கும் அடங்காத, மேலும் மேலும் விரிந்து செல்லும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவன் என்றதால் அவனுடைய தன்மையைச் சுட்டினாராயிற்று. - 349. ஏர் தரும் ஏழ் உலகு எத்த எவ் உருவும் தன் உரு ஆய் ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர்

  • . வண்டோதரிக்குப் பேர் அருள் இனபம் அளித்த பெருந்துறை மேய பிரானை சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனைக் கூவாய் 2