பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஏர்தரும்-அழகு பொருந்திய, ஆர்கலி-கடல்; இறைவனுடைய அருளுந்தன்மை பற்றிக் கூறவந்த அடிகளார், அதனைக் கூறுவதற்கு முன்னர் அவன் ஏழுல கும் நின்று ஏத்தும் தன்மையன் என்கிறார். இதற்கடுத்த படியாக, அவனது அருளிச்செயல்களில் மற்றொரு புதுமையையும் எடுத்துக்கூறுகிறார். உலகில் சர, அசரமாகிய இரண்டினிடையே உள்ள, உருவுடைய பொருள் எதனை எடுத்துக்கொண்டாலும், அந்த உருவிலும் அவன் கலந்து நிற்கின்றான் என்ற கருத்தை எவ்வுருவுந் தன்னுருவாய்' என்று கூறுகிறார். அதாவது, துன்பத்தைச் செய்யும் புலியும், அத்துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் மானும் ஒன்றுக் கொன்று முற்றிலும் மாறுபட்டவை என்றுதான் இதுவரை நினைத்திருந்தோம். இந்த இடத்தில் நம் மனத்தில் ஏற்படும் குழப்பத்தைப் போக்க அடிகளார், புலி உருவிலும் அவன்தான், புல்வாய் உருவிலும் அவன்தான் உள்ளான் என்பதைக் குறிக்க எவ்வுருவும் தன்னுருவாய்' என்றார். அடிகளார் கூறிய இந்த அருமைப்பாட்டை அறிந்து கொண்ட மகாகவி பாரதி தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவோம். அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்' என்று பாடியுள்ளமை அறியவேண்டிய ஒன்றாகும். மண்டோதரி இராவணன் மனைவி ஆவாள். பிறருக்குத் தன் கணவன் செய்யும் கொடுமையை நினைத்து வருந்தினவள் ஆவள். இறுதியாகச் சீதை பிரச்சினை வந்த காலத்திலும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தவிர்க்க முடியாத இத்தகைய துன்பத்திற்கு ஆளாகியவர்