பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வழியைக் கையாள்கிறார் அடிகளார். கூவப்படவேண்டிய தலைவனை, நாயகன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு, யாருக்கு நாயகன் என்பதை ஒரு முழு அடியில் விளக்குகிறார். கோல அழகில் திகழும் கொடி மங்கை என்று கூறியவுடன் அந்தக் குயில், கொடிமங்கைபற்றி நினைக்கும் அல்லவா? நினைக்கத் தொடங்கினால் முதலில் வடிவுதானே நினைவுக்கு வரும்: அந்த அழகிய வடிவு என்ன நிறத்தோடு உள்ளது? அன்னையின் நிறம் நீலமல்லவா? நீல நிறமுடைய அம்மையை, குயிலின் நினைவுக்கு கொண்டு வருகிறார் அடிகளார். குயிலும் நீலநிறமுடையது; கொடி மங்கையும் நீலநிறமுடையவள். எனவே கொடிமங்கைக்குத் தன்னோடு உள்ள நிற ஒற்றுமை கருதி, அவளைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கும் அந்த நேரம் பார்த்து, குயிலே! இதுவரை நீ எந்த நீல நிறமுடைய மங்கையைப்பற்றி நினைந்து கொண்டிருந்தாயோ, அவள் நாயகனை வரும்படி கூவுவாயாக' என்ற நுண்மையான கருத்தையும் உள்ளடக்கியது இப்பாடல். 351. தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட் கொண்ட -- 6).j6tröfð ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன் . ف: "سي لا மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக் - கூவாய் 4 பயிலும்-இடைவிடாது தங்கும். வான் பழித்து-போக பூமியாகிய வானைப் பழித்து. மண் புகுந்து-ஞான பூமியாகிய மண்ணுலகத்தில் எழுந்தருளி. ஊன் பழித்து-உடம்பை விட்டுவிட்டு