பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 காக்கின்ற அப்பெருமான் அணிந்துள்ள தார்(மாலை வில்வமும், அறுகம்புல்லும் கூடிய மாலையாகும். 367. சோலைப் பசும் கிளியே து நீர்ப் பெருந்துறைக் கோன் கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் ஏதிலார் துண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும் கோது இலா ஏறு ஆம் கொடி 10 ஏதிலார்-பகைவர். ஏர்-அழகு. துண்-நடுக்கம், ஏறு-இடபம், சோலையில் வாழுங்கிளியே! நம் தலைவனின் கொடி என்ன தெரியுமா? அழகு பொருந்திய இடபக் கொடியே அவன் ஏற்றுக் கொண்ட கொடியாகும்.