பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருத்தசாங்கம் 233 "கொம்புத் தேன் போன்ற இனிய சொற்களைப் பேசும் கிளியே! நம் தலைவனின் படைக்கலம் எது என்று தெரியுமா? அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவர் களின் நெஞ்சு உருகும்படியாக உள்ளே புகுந்து அவர்கள் மும்மலங்களையும் ஒருசேர ஒழிக்கும் கழுக்கடையே (திரிசூலமே) அவன் படைக்கலமாகும்’ என்க. 365. இன் பால் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக் கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால் பிறவிப் பகை கலங்கப் பேரின்பத்து ஓங்கும் பரு மிக்க நாதப் பறை 8 முன்பால்-முன்புறம். பருமிக்க-பெரிய, 'இனிய மொழி பேசும் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன் தங்கியுள்ள இடத்தின் முன்பகுதியில் முழங்கும் பறை என்னவென்று தெரியுமா? பிறவியாகிய பகை கலங்கும்படி மிகப் பெரிய ஒலியோடு சப்திக்கின்ற நாத தத்துவம் என்னும் பறையாகும் அது’ என்க. இங்கு நாதம் என்பது ஆதிநாதம், அதாவது எல்லா ஒலிகளுக்கும் மூலகாரணமாய் இருக்கின்ற ஆதி ஒலியாகும். 366. ஆய மொழிக் கிள்ளாய் அள்ளுறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தார் என் தீய வினை நாளும் அனுகாவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளி அறுகு ஆம் உவந்த தார் 9 அள்ளுறும்-மிகுதியாக ஊறுகின்ற, தாளி-வில்வம் 'ஆராய்ந்த மொழியைப் பேசும் கிளியே! நம் தலைவன் அணிந்துள்ள மாலை என்னவென்று தெரியுமா? தீயவினைகள் என்னை என்றும் வந்து அணுகாவண்ணம்