பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கிளியே, நம் தலைவனின் மலை எது தெரியுமா? அஞ்ஞானம் நீங்க ஒளியை வீசி இன்பத்தோடு கூடிய முத்தியை அருளும் மலை என்று அறிக. 363. இப் பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும் தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வப் பண் ஏத்து இசைப்ப வான் புரவி ஊரும் மகிழ்ந்து 6 இப்பாடு-இவ்விடம்; இந்தப் பக்கம். கூடு புகல் - கூட்டிற் புகாதே. ஒப்பு ஆடா- ஒப்பில்லாதவன். "கிளியே, கூட்டுக்குள் சென்றுவிடாமல் இங்கே வருவாயாக நம் தலைவனின் ஊர்தி எது தெரியுமா? தெய்வப் பெண்கள் சுற்றி நின்று ஏத்த, வான் புரவியில் செல்வான் அவன்'. வான் புரவி என்பதற்கு ஆகாயத்தையே ஊர்தியாகக் கொண்டவன் என்றும் பொருள் கூறலாம். அடுத்து, புரவியை வானத்தில் செலுத்துவான் என்றும் கூறலாம். 364. கோல் தேன் மொழிக் கிள்ளாய் கோது இல் - பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும் கழுக்கடை காண் கைக் கொள் படை 7 கோல் தேன்-கொம்புத்தேன். மாற்றார்- பகைவர். ஏற்றார்-உம்மால் ஆட்கொள்ளப்பெற்றவர். அழுக்கு-மலம், கழுக்கடை-சூலம் (ஒரு வகை படைக்கலம்) -