பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தசாங்கம் 231 360. தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய் நமை ஆளும் மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என் கோதாட்டிப் பத்தர் எல்லாம் பார்மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோசமங்கை ஊர் 3 தத்தாய் - கிளியே. தாது-மகரந்தம்; மாதாடும் பாகத்தன்-மாது தங்கியுள்ள இடப்பாகத்தை உடையவன். கோதாட்டி - பாராட்டி. நில உலகில் வாழும் பக்தர்கள், தம் ஊனக் கண்ணாலும் தாங்கள் காணக் கூடிய சிவபுரம் என்று சொல்வது திருஉத்தரகோசமங்கை என்னும் ஊரேயாம். 361. செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வி நம் சிந்தை சேர் ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய் வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும் ஆனந்தம் காண் உடையான் ஆறு 4 நம் சிந்தையில் குடிகொண்டவனாகிய பெருந்துறைக் கோனின் ஆறு எது தெரியுமா? நம் மனத்திலுள்ள குற்றங்களை (மலம்) கழுவுவதற்குரியதும் வானத்திலிருந்து வந்ததும் ஆகிய பாண்டிப்பிரானுடைய ஆனந்தமே ஆறாகும். 362. கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடுஇல் பெருந்துறைக் கோன் மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி அருளும் மலை என்பது காண் ஆய்ந்து 5 கிஞ்சுகவாய்-முள் முருங்கை மலர் போன்ற சிவந்த வாய். அம் சுகம்-அழகிய கிளி. வாள் - ஞானவாள்.