பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எல்லையில்லாத அன்பு இருந்தது உண்மைதான். அந்த அடிப்படையில்தான் எங்கள் பெருந்துறைக் கோன்' என்றார். ஆரூரில் வாழ்பவனும் சிவந்த நிறத்தை உடையவனு மாகிய எங்கள் பெருந்துறைக் கோனை, நான்முகனும் மாலும் என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்று மிகவும் ஆராய்ந்து, இறுதியாகத் தேவர்.பிரான்' என்றே கூறினர். அதுவே அவன் திருப்பெயர் என்று கூறுவாயாக' 359. ஏதம் இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு அன்பு ஆண்டு மீளா அருள் புரிவான் நாடு என்றும் தென் பாண்டி நாடே தெளி 2 மரகதம்-பச்சை. அன்பு ஆண்டு-அன்பினால் ஆட்கொண்டு. மீளா அருள்-மீண்டுவராமைக்கு ஏதுவாகிய அருளை. தெளி-அறி, ஏதம்குற்றம்; பொழில்- உலகம். 'குற்றம் இல்லாத சொற்களைப் பேசும் பச்சை நிறக் கிளியே! ஏழு உலகங்களையும் படைத்து அவற்றிற்குத் தலைவனாக உள்ளவனின் நாடு எது தெரியுமா? தன்னை வந்து அடைந்தவர்களை மீண்டும் பிறவாமல் காத்து அருள் செய்பவனுடைய நாட்டைத் தென் பாண்டி நாடு என்றே தெளிவாயாக’, வடபாண்டி நாடு என்ற ஒன்று இன்மையின் ‘தென்பாண்டி என்பது அழகிய பாண்டி நாடு என்ற பொருளையே தரும். -