பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தசாங்கம் 229 பேசியுள்ளார் என்றால், இதனை எங்கிருந்து பெற்றார் என்பது ஆராயப்பெற வேண்டும். அடிகளார் தம்மை ஆட்கொண்ட ஆலவாய்ச் சொக்கனை ஒர் அரசனாக நினைத்து அவனுக்குரிய பத்து உறுப்புக்களையும் கிள்ளையைச் சொல்லுமாறு பணிக்கின் றார். கிளி எந்த ஒன்றையும் தானே சிந்தித்துப் பேசும் இயல்புடையதன்று. நாம் சொல்லிக் கொடுத்ததைத் திரும்பச் சொல்லும் இயல்புடையது ஆதலின், அடிகளார் அவனுடைய நாடு போன்றவற்றைப்பற்றித் தம் கருத்துக்களை விரிவாகக் கூறி அதனைத் திருப்பிச் சொல்லுமாறு கிளியைப் பணிக்கின்றார். பொதுவாக, இவரி முதலியவற்றிடம் பேசுதல் பெண்களுக்கே உரியதாகலின் அடிகளார் தம்மைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு இவற்றைப் பாடியுள்ளார் என்று கொள்வதும் தவறில்லை. 358. ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந் துறைக் கோன் சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரான் செம் பெருமான் வெள் மலரான் பாற் கடலான் செப்புவ போல் எம் பெருமான் தேவர் பிரான் என்று 1 ஏர்-அழகு; வெள்மலரான் தூய மலரில் அமர்ந்திருக்கும் பிரமன். பாற்கடலான் - திருமால். இப்பாடலில் வரும் எங்கள் பெருந்துறைக் கோன்' என்ற தொடர் சற்றுப் புதுமையானது. பெருந்துறை என்பது அரசர்க்குரிய நாடோ நகரமோ அன்று. திருவாதவூரர், மணிவாசகராக மாறுவதற்கு உதவிபுரிந்த இடம் பெருந்துறை ஆதலால், அவ்வூர்மாட்டு அடிகளாருக்கு