பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 சங்க காலத்திலும் பக்தி இலக்கிய காலத்திலும் அதிகம் பயன்படுத்தப்படாத வெண்பா அடிகளாரின் திருவாசகத்தில் இடம்பெற்றது ஒரு புதுமையேயாகும். அடிகளாருக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவராகிய காரைக்கால் அம்மையார் நூறு வெண்பாக்களுக்கு மேலும் பாடியுள்ளார் என்றாலும், அவருக்குப் பின்னால் ஏனோ வெண்பாக்கள் அதிகம் இடம் பெறவில்லை. பக்தி போன்ற உணர்ச்சியை வெளியிட வெண்பா அதிகம் இடம் தராது என்பது உண்மைதான். அதனாலேயே இறைவனுடைய பத்து உறுப்புக்களைப் பட்டியலிட்டுக் காட்டும் இப்பகுதி மட்டும் வெண்பாவில் அமைந்துள்ளது. தசாங்கம் இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாமைக்குத் தக்க காரணம் உண்டு. இப்பத்தில் யாறு, மலை என்பவை இடம் பெறுகின்றன. எந்த ஒரு மலையும் அல்லது ஆறும் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நாட்டின் எல்லைக்குள் அடங்கிவிடும் என்று கூறிவிட முடியாது. எனவே, ஒரு மலையை அல்லது ஆற்றை ஒரு மன்னனுக்குரியது என்று சொல்வது பொருத்தமாயிராது. அப்படியே கூறினாலும் அது உபசார வழக்காகவே முடியும். உதாரணமாகக் காவிரி ஆற்றை, சோழர்க்குரியது என்றும், சோழர் காவிரி என்றும் சங்க இலக்கியம் பேசினாலும், அது தோன்றிய இடமும் ஓடிவரும் தூரத்தில் ஐந்தில் ஒரு பாகமும் சோழ நாட்டைச் சேர்ந்ததன்று என்பதும் அறியப்பட வேண்டும். தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காணப்பெறாத தசாங்கத்தைக் கீர்த்தித் திருவகவலிலும் இங்கும் அடிகளார்