பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருத்தசாங்கம் (அடிமை கொண்ட முறைமை தச அங்கம் என்ற இரண்டு வடசொற்கள் சேர்ந்து தசாங்கம் என்ற சொல் உருவாயிற்று. அதாவது, பத்து உறுப்புக்கள் என்ற பொருளைத் தரும். பத்து உறுப்புகள் என்று கூறியவுடன் தனி மனிதனுக்குரிய உறுப்புக்களைக் குறிக்காமல் அரசனுக்குரிய பத்து அங்கங்களைக் குறிப்பதா யிற்று. ஒர் அரசனுக்குரிய தனிப்பட்ட உறுப்புக்கள் என்று பழைய தமிழ் இலக்கியங்களில் எதுவும் பேசப்பெற்றதாய்த் தெரியவில்லை. வாள், குடை, கொடி முதலியன அரசனுக் குரிய உறுப்புக்களாகச் சங்கப் பாடல்களில் பேசப்பெற்றுள் ளன எனினும், பத்து என்ற எண்ணிக்கையோ தசாங்கத்தில் கூற்ப்பெற்ற மலை, ஆறு, ஊர்தி என்பவையோ அப்பழைய இலக்கியங்களில் எங்கும் இடம் பெறவில்லை. கெளடில்யனுடைய அர்த்தசாத்திரத்தில் இவ்வுறுப்பு கள் சில பேசப்பெற்றுள்ளனவேனும், யாறு, மலை முதலியன அந்நூலிலும் அரசனுக்குரிய உறுப்புக்களாகப் பேசப்பெற வில்லை. இந்நிலையில் அடிகளாருக்கு முன்பு எந்தத் தமிழ் நூலிலும் காணப்பெறாத தசாங்கம் எப்படித் திருவாசகத்தில் இடம் பெற்றது என்பது மேலும் ஆராய்ச்சிக்குரியதாகும்.