பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருவடிகளைக் காட்டி அடிமையாக ஆண்டுகொண்டான் என்றே கூறி வந்துள்ளார். தொழும்பர் என்ற சொல்லின் பொருளும் இதுவேயாம். முதன்முறையாக எந்த மராம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்’ என்று கூறுகிறார். ஆகவே, தம்மை அடிமையாகமட்டுமல்லாமல் உரிமைகள் பல பெற்றுள்ள உறவினனாகவும் ஏற்றுக்கொண்டான் என்று பேசுகிறார்.