பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிற் பத்து 225 356. கார் உடைப் பொன் திகழ் மேனிக் கடிபொழில் வாழும் குயிலே சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன் பாளிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து எனை ஆண்ட ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வரக் கூவாய் 9 கார்-கருமை. பொன்திகழ் மேனி-ஒளிவிளங்குகின்ற உடல். ஆர்ஆத்திமாலை. சிறப்புப் பொருந்திய தாமரைபோன்ற திருவடி களையுடைய பெருமான் மண்ணிடை வரும்போது கனவிலும் தேவர்கள் காண்பரிய திருவடிகளைக் காட்டினான். பாதங்களைக் காட்டியதன் நோக்கம் என் பாசங்களை வேரொடு அறுக்கவேயாம்' என்க. 357, கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே இது கேள் நீ அந்தணன் ஆகி வந்து இங்கே அழகிய சேவடி காட்டி எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும் செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான் வரக் கூவாய் 10 கொந்து-பூங்கொத்து; அணவும்-நெருங்கிய தமர்-சுற்றத்தார். ஆட்கொள்ளுதல் பல வகைப்படும். அடிமை என்று ஒருவரை ஆட்கொள்ளுதல் ஒருவகை; உறவினராக ஆட்கொள்ளுதல் மற்றொரு வகை. இதுவரை அடிகளார் கூறிவந்த வகை முதலாவது வகையைச் சேர்ந்ததாகும் பெருந்துறையில் குருநாதர் வடிவாக வந்த நாயகன் தன்