பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்று கருதாதே. நீ இருக்கும் இடத்திற்கே வந்து உனக்கு இனிய தோழியும் ஆவான். பொன்னை ஒத்த அழகன்; புகழினை உடையவன் தென்னவன், சேரலன், சோழன் என்றது தமிழ் மன்னர்க மூவரையும் குறித்ததாயிற்று. மனித மனம் எந்த ஒரு வேலையைச் செய்யவேண்டு மாயினும் அதனால் கிடைக்கும் உடனடிப் பயணிலேயே ஆர்வம் கொண்டிருப்பதுபோலக் குயிலும் இருக்கும் என்ற கருத்தில் ‘உன்னை உகப்பன்' என்றும் 'உன்துணைத் தோழியும் ஆவன்' என்றும் கூறினாராயிற்று. 355. வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஒவி அவர் உன்னி நிற்ப ஒண் தழல் விண் பிளந்து ஓங்கி மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன் தாவி வரும் பரிப் பாகன் தாழ் சடையோன் வரக் கூவாய் 8 ’ஏ குயிலே! நீ இங்கு வருவாயாக. மால், நான்முகன் ஆகிய இருவரும் தேட முயன்றபோது அண்டங்கள் கடந்து அழலுருவாய் நின்ற அவனே இப்பொழுது குதிரைச் சேவகனாக நம் பொருட்டு வந்தான். ஒவி, உன்னி நிற்ப என்பது தங்கள் முயற்சி வெற்றியடையாமையால் மேற்கொண்டு என்ன செய்வது என்று சிந்தித்து உன்னி ஓவியம் போல ஒவி) நிற்ப என்பதாகும். -