பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிற் பத்து 223 சாவாத வாழ்வை மட்டும்தானே தரும் என்று கவலையுறுகிறாயா? ஆனந்த வடிவினனாகிய அவன், கலப்படம் இல்லாத, அழிவில்லாத, மேலும் மேலும் ஊற்றெடுக்கின்ற ஆனந்தத்தையும் தருவான்’ என்கிறார். அதாவது, குயிலே! அவன் அன்பனாகிவிட்டால் இன்பம், ஏழுலகு, அமுது ஆகியவற்றைத் தருவதோடு ஊறுகின்ற ஆனந்தத்தையும் தருவான்’ என்கின்றபடி, 'நல்ல பொன்னால் செய்யப்பட்டு, மணிகள் அழுத்திய அங்கவடி போன்ற பொன்னிறத்தை உடைய குதிரையின் மேல் வருபவன், கோகழிக்குத் தலைவன் ஆகிய பெருமானே ஆவான். அவன் வருமாறு கூவுவாயாக (ஏழுலகும் முழுது ஆளி என்பதற்கு ஆள்பவன் என்று பொருள் கூறுவதைக் காட்டிலும் ஏழுலகையும் நீ ஆள்பவன் என்ற சிறப்பைத் தருபவன் என்றும் பொருள் கொள்ளலாம். 354. உன்னை உகப்பன் குயிலே உன் துணைத் தோழியும் வன் பொன்னை அழித்த நல் மேனிப் புகழின் திகழும் அழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் சீர்ப் புயங்கன் வரக் கூவாய் 7 உகப்பன்-விரும்புவன். பரிமிசை வந்த வள்ளல்-குதிரை மேல் வந்த அருள்வள்ளல். புயங்கன்-பாம்பை அணிந்தவன். 'குயிலே மனிதர்க்கும் தேவர்க்கும்மட்டும் உரியவன் அவன் என்று கருதாதே. அவன், உன்னையும் உகப்பன். எங்கோ இருந்துகொண்டு உன்மாட்டு அன்பு செய்வான்