பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வேண்டுமானால் அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு வினைமுதல் அல்லது கர்த்தா வேண்டும். அந்தக் கர்த்தாக்கள் முறையே பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவர் ஆவர். (உருத்திரன் என்பவன் சிவனினும் வேறுபட்ட மும்மூர்த்தி களுள் ஒருவனாவான்). அடியவர் ஆசையை அறுப்பதற்காக அந்தரத்தே நின்று இழிகின்றவன் தன் திருவடிகளோடுதானே இறங்கியிருக்க வேண்டும்? அவை சாதாரணத் திருவடிகளா? சிந்துர நிறமுடைய சேவடிகள் ஆயிற்றே! எந்தக் கூட்டத்திலும், சிவப்பு நிறம் பளிச்சென்று தோன்றுமே, அப்படியிருக்க அந்தச் சிந்துரச் சேவடிகளை இந்த மூவரும் காணமுடியாமல் தவித்தது வினோதமல்லவா என்றவாறு. 353. இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானைக் கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய் - 6 ஆளி:ஆள்வோன், ஆளத்தருபவன்; கவடு-அங்கவடி தழும்பு. கோகழிநாதன்-திருவாவடுதுறைப் பெருமான். ‘குயிலே இவ்வுலகிடை எவற்றை நீ இன்பம் என்று கருதுகிறாயோ அவை அனைத்தையும் தருவான்; அம்மட்டோடில்லை. ஏழுலகம் முழுவதையும் நீ ஆளத் தருவான். இவை இரண்டுமே சிறப்புடையன ஆயினும், நிலையற்றவை என்று கருதுகிறாயா? கவலையை விடு. உனக்கு அன்பனாக அவன் ஆகிவிட்ட பிறகு நிலைபேறு அளிக்கும் அமுதையும் அளிப்பான். அந்த அமுதும்