பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிற் பத்து 221 இறைவனுக்குரிய தனிச்சிறப்பை இரண்டாம் அடியில் விவரிக்கின்றார். ‘சூழ் சுடர் ஞாயிறு போல’ என்ற உவமை நம்முடைய கருத்தைத் துரண்டுவதாகும். சூழ் சுடர் ஞாயிறு என்றால், சுடரால் சூழப்பெற்ற ஞாயிறு என்பது பொருளாகும். கதிரவன் தோன்றுவதற்கு முன்னர், அவனைச் சுற்றியுள்ள சுடர், உலக இருளை ஒரளவு போக்கிவிடுகிறது. காரணம், வளைந்து உள்ள இடங்களில் சூழ் சுடர் செல்ல முடியாது. சூரியன் உதயமான பிறகுதான் வளைந்துள்ள இடங்கள், சந்துகள், பொந்துகள் போன்ற இடங்களில் இருளைப் போக்க முடியும். அதேபோல, அந்தரத்தே நிற்கின்ற நிலையில் அவனுடைய அடியார்கள் அவன்மாட்டு அன்புசெய்து ஒரளவு முன்னேறுகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த உடம்புக்கென்று சில தனி இயல்புகள் உண்டல்லவா? பொறி புலன்கள் என்பவை இருக்கின்ற வரையில், மனம் அவற்றோடு சேர்ந்து தொழிற்பட, அங்கே ஆசை தோன்றுகிறது. இறைவன் அந்தரத்தே திகழ்கின்ற வரையில் அடியவர்களின் பொறிபுலன் ஆசை அழிவதில்லை. அறுபடாத இந்த ஆசைகளோடு போராடிக்கொண்டு அவதியுறும் அடியவரின் துன்பத்தைப் போக்க, அந்தக் கருணை வள்ளல் என்ன செய்தான் தெரியுமா? அந்தரத்தே நின்ற அவன் அடியவர் இருக்கும் இடத்திற்கு இறங்கிவந்து இழிந்து அவர்களின் ஆசையை அறுக்கின்றான். தோற்றம், இருப்பு, மறைவு என்ற மூன்றுமே இங்கு முந்து, நடுவு, முடிவு என்று அடிகளாரால் பேசப்பெறு கின்றன. தோற்றம், இருப்பு முதலிய வினைகள் நடைபெற