பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தன்முனைப்போ அல்லது தற்போதமோ என்று சொல் லப்படுவது, நான் என்ற உணர்வுதானே? என் உணர்வு முழுவதும் அவனாக ஆகிவிட்ட பிறகு நான் என்ற ஒன்றிற்கு இடமே இல்லை. இந்த அருங்கருத்தைத்தான் “உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்” என்கிறார் அடிகளார். இப்பாடலிலும் உமையைக் குயிலுக்கு நினைப் பூட்டுவது போல மான்பழித் தாண்ட மென்னோக்கி என்கிறார். - 352. சுந்தரத்து இன்பக் குயிலே சூழ் சுடர் ஞாயிறு போல அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் முந்தும் நடுவும் முடிவும் ஆகியது மூவர் அறியாச் சிந்துரச் சேவடியானைச் சேவகனை வரக் கூவாய் 5 மூவர்-பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் சுந்தரம்-அழகு. சூழ்சுடர் ஞாயிறு-கிரணங்கள் சூழ்ந்த சூரியன். அந்தரம்-ஆகாயம். சிந்துரம்பொடி. உலகியலில் ஒரு மரபு உண்டு. ஒருவரிடம் ஒரு வேலையை வாங்கவேண்டுமென்றால் அவர் மனங்குளிரும் படி இரண்டொரு வார்த்தைகளால் அவரைப் புகழ்ந்து விட்டு, பிறகு நம் வேலையைக் கொடுத்தால் அவர் விருப்பத்தோடு நிறைவேற்றுவார். இந்த உலகியல் முறைதான் அடிகளாரை சுந்தரத்து இன்பக் குயிலே' என்று விளிக்குமாறு செய்கிறது. குயிலின் குரல் கேட்போருக்கு இன்பம் தருவதாயினும், அதனுடைய உடலமைப்பு அழகியது என்று சொல்வதற்கில்லை. என்றாலும் சுந்தரத்துக் குயிலே என்கிறார் அடிகளார்.