பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அருணன்-சூரியனின் தேரோட்டி இந்திரன் திசை-கிழக்குத்திசை கடிமலர்-மணமுள்ள மலர். அறுபதம்-ஆறுகால்களையுடைய வண்டு. மிகப் பெரிய மன்னர்களைச் சூதர்கள் பாடித் துயில் எழுப்புவதைப் போலவே, இத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் அமைந்துள்ளன என்பதை முன்னர்க் கண்டோம். மன்னருக்குப் பாடும் பள்ளியெழுச்சிக்கும், இறைவனுக்குப் பாடும் திருப்பள்ளியெழுச்சிக்கும் சில சில ஒற்றுமைகள் இருப்பினும், ஒரு பெரிய வேற்றுமை உண்டு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மன்னனைப் பாடும் புகழுரைகள் ஒரளவே உண்மையுடையனவாக இருக்கும். பெரும்பாலும் உயர்வு நவிற்சி, கற்பனை, புனைந்துரை என்பவைகளால் நிறைந்திருக்கும் வெற்றுரைகளாகும் அவை. எவ்வளவு பெரியவர்களாயினும் இம்மன்னர்கள் மனிதர்கள்தாமே! எனவேதான் அவர்களுக்குரிய பள்ளி எழுச்சிப் பாடல்களில் மனிதர்க்குரிய உயர்வுநவிற்சி, கற்பனை ஆகியவை இடம் பெறுகின்றன. ஆனால், இறைவனைப்பற்றிப் பாடப்பெறும் திருப் பள்ளியெழுச்சியில் உயர்வுநவிற்சி, கற்பனை, புனைந்துரை என்பவற்றிற்கு இடமேயில்லை. ஏனெனில், எதனைக் கூறினும் அதற்கு உரியவனாகவும் மேம்பட்டவனாகவும் அவன் உள்ளான். எனவே, இறைவனைக் கடல் என்றும், மலை என்றும் கூறும்பொழுது, அச்சொற்கள் வெறும் உருவகமாக மட்டும் அமையாமல், ஆழமான பொருளுடைய, இறைவனுடைய பெருமையை நன்கு விளக்கக்கூடிய சொற்களாக அமைந்துவிடுகின்றன. கதிரவன் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றும் அருணன், கீழ்த்திசையில் தோன்றினானாக இருட்கணம் அகன்றது. நம்முடைய பொறி, புலன் சேட்டை, அறுவகைக் குற்றம், அஞ்ஞானம் ஆகிய இருட்கணம் இறையிருள் என்ற